தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடகாவில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட இரட்டைக் குழந்தைகள் பலி! என்ன நடந்தது? - Twins dead after eating ice cream - TWINS DEAD AFTER EATING ICE CREAM

கர்நாடகாவில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 18, 2024, 5:21 PM IST

மாண்ட்யா : கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம் பெட்டஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசன்னா. இவரது மனைவி பூஜா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் இரட்டைக் குழந்தைகள் உள்ளனர். தற்போது கோடை காலமாக இருப்பதால் வாகனத்தில் ஐஸ்கிரீம் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுவது வழக்கமாகி விட்டது.

அதுபோல் இவர்களது ஊருக்கு வாகனத்தில் கொண்டு வந்த ஐஸ்கிரீமை பூஜா தனது இரட்டை குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட சில மணி நேரத்தில் இரட்டை குழந்தைகளுக்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ஐஸ்கிரீம் சாப்பிட்ட பூஜாவுக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து 2 குழந்தைகளும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இரட்டை குழந்தைகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் பூஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல் அந்த ஊரில் பலரும் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

எனவே இரட்டை குழந்தைகளின் மரணம் சந்தேகத்துக்குரியதாக இருப்பதாக போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த சமப்வம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோடை காலத்தில் ஐஸ்கிரீம் சாப்பிட்ட இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க :ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை? - Japan Earthquake

ABOUT THE AUTHOR

...view details