ஜல்கான் (மகாராஷ்டிரா):ரயிலில் தீ பற்றுவதாக அஞ்சிய பயணிகள், அபாய சங்கிலியை இழுத்து கீழே இறங்கிய போது, மற்றொரு ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் குறைந்தது ஆறு பேர் இறந்ததாக அஞ்சப்படுகிறது. மகாராஷ்டிரா மாநிலம், ஜல்கான் அருகே இக்கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
ரயிலில் இருந்து குதித்த பயணிகள் மீது மற்றொரு ரயில் மோதிய விபத்தில் 6 பேர் பலி! - MAHARASHTRA TRAIN ACCIDENT
ரயிலில் தீ பற்றுவதாக அஞ்சிய பயணிகள், அபாய சங்கிலியை இழுத்து கீழே இறங்கியபோது, மற்றொரு ரயில் மோதி ஏற்பட்ட விபத்தில் குறைந்தது ஆறு பேர் இறந்ததாக அஞ்சப்படுகிறது. மகாராஷ்டிராவின் ஜல்கான் அருகே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

Published : Jan 22, 2025, 6:37 PM IST
|Updated : Jan 22, 2025, 6:50 PM IST
புஷ்பாக் விரைவு ரயில் பயணிகளுடன் இன்று மாலை சென்று கொண்டிருந்தது. அப்போது குறிப்பிட்ட பெட்டியில் தீ பற்றுவதாக அஞ்சிய பயணிகள் சிலர், அபாய சங்கிலியை இழுத்து, ரயிலில் இருந்து அவசர அவசரமாக இறங்கி உள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த பெங்களூரு விரைவு ரயில் பயணிகள் மீது மோதியதில் குறைந்தது ஆறு பேர் இறந்ததாக அஞ்சப்படுகிறது. காயமடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிராவின் ஜல்கான் பகுதிக்குட்பட்ட பரன்டா ரயில் நிலையத்துக்கு அருகே இக்கோர விபத்து நிகழ்ந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.