தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

LMV லைசன்ஸ் வைத்திருப்பவர்கள் இனி போக்குவரத்து வாகனங்களை ஓட்டலாம்..! - சுப்ரீம் கோர்ட் கூறுவது என்ன..? - LMV LICENCE HOLDER

இலகுரக மோட்டார் வாகனம் (எல்எம்வி) ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் எவரும் 7,500 கிலோவுக்கு மிகாமல் எடைகொண்ட போக்குவரத்து வாகனத்தை ஓட்டுவதற்கு உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

சுப்ரீம் கோர்ட், வாகன நெரிசல் (கோப்புப்படம்)
சுப்ரீம் கோர்ட், வாகன நெரிசல் (கோப்புப்படம்) (credit - ANI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 6, 2024, 12:45 PM IST

புதுடெல்லி:இலகுரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் (LMV) வைத்திருக்கும் ஒருவர், 7,500 கிலோ எடை கொண்ட போக்குவரத்து வாகனத்தை ஓட்டுவதற்கு உரிமை உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மோட்டார் வாகன சட்டம் 1988 இன் படி, இலகுரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் (LMV) பெற்றவர்கள் கார், ஜீப், டாக்சி, ஆட்டோ ரிக்ஷா போன்ற இலகுரக தனியார் வாகனங்களை மட்டுமே இயக்க முடியும். வணிக நோக்கத்திற்கு ஹெவி வெயிட் வாகனங்களுக்கு எல்எம்வி ஓட்டுநர் உரிமத்தைப் பயன்படுத்த முடியாது. இந்த நிலையில், எல்எம்வி லைசன்ஸ் வைத்திருப்பவர்கள் இனி 7,500 கிலோ எடையுள்ள போக்குவரத்து வாகனத்தை ஓட்டலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இலகுரக மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் (LMV) போக்குவரத்து வாகனங்களை ஓட்டி விபத்து ஏற்பட்டால், காப்பீட்டு வழங்கும் உரிமைகோரலில் சட்டசிக்கல்கள் இருந்து வருகிறது. இதையொட்டி பல்வேறு கேள்விகளும், சர்ச்சைகளும் அவ்வப்போது கிளம்புகின்றன.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில், நீதிபதிகள் ஹிருஷிகேஷ் ராய், பிஎஸ் நரசிம்ஹா, பங்கஜ் மித்தல், மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வந்தது.

இதையும் படிங்க:'இந்தில பேசு, இல்லன்னா கேஸ் போடுவேன்'.. மராத்தி தம்பதியை மிரட்டிய டிக்கெட் செக்கர் சஸ்பெண்ட்..!

கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி நடந்த விசாரணையின்போது மத்திய அரசு சார்பில், '' மோட்டார் வாகனங்கள் சட்டம், 1988ஐ திருத்துவதற்கான ஆலோசனைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன. முன்மொழியப்பட்ட திருத்தங்கள் இன்னும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மட்டுமே இதை நிறைவேற்ற முடியும்'' என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இன்று இந்த வழக்கி்ல் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், '' எல்எம்வி (LMV) லைசன்ஸ் ஓட்டுநர்கள், போக்குவரத்து வாகனங்களை ஓட்டுவதால்தான் சாலை விபத்துக்களுக்கு முக்கிய காரணம் என்பதை உறுதிப்படுத்த அரசிடம் போதிய ஆதாரம் தாக்கல் செய்யப்படவில்லை. நாட்டில் சாலை விபத்துகள் குறித்த தரவுகளின் பின்னணியில், எல்எம்வி ஓட்டுநர்கள்தான் காரணம் என்று கூறுவது ஆதாரமற்றது. உலகளவில் சாலைப் பாதுகாப்பு என்பது ஒரு பொதுப் பிரச்சினை ஆகும். போக்குவரத்து வாகனங்களை ஓட்டுவதற்கான உச்ச வரம்பானது 7,500 கிலோவுக்கு மேல் எடையுள்ள போக்குவரத்து வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். எல்எம்வி லைசன்ஸ் உள்ளவர்கள் இனி 7,500 எடைகொண்ட போக்குவரத்து வாகனங்களை ஓட்டலாம் என்றும் 7,500 கிலோவிற்கு குறைவான எடையுள்ள வாகனத்தை ஓட்டும் எல்எம்வி லைசன்சாளர்கள் இன்சூரன்ஸ் க்ளைம் செய்ய இந்தத் தீர்ப்பு உதவும் என குறிப்பிட்டு இந்த உத்தரவை பிறப்பித்தனர்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details