தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கர்நாடகாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை வழக்கு! சொத்துக்காக நடந்த கொலை! திடுக்கிடும் தகவல் வெளியீடு! - Karnataka Gadag murder case - KARNATAKA GADAG MURDER CASE

கர்நாடகாவில் நகராட்சி துணைத் தலைவர் மகன் உள்பட 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. சொத்தை விற்க மறுப்பு தெரிவித்த ஆத்திரத்தில் மகனே கூலிக்கு அடியாட்களை பணியமர்த்தி குடும்ப உறுப்பினர்களை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 23, 2024, 6:27 PM IST

கடக் :கர்நாடக மாநிலம் கடக் பகுதியில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுதியது. இந்த கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் 72 மணி நேரத்தில் 8 பேரை கைது செய்து உள்ளனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடக் - பெடகிரி பகுதியை சேர்ந்தவர்கள் பிரகாஷ் பாகலே - சுனநந்தா தம்பதியினர் நகராட்சி துணை தலைவராக உள்ளனர். இவர்களுக்கு கார்திக் பாகலே என்ற மகன் உள்ளனர். மேலும் விநாயக் பாகலே என்ற மற்றொரு மகனும் உள்ளனர்.

விநாயக் பாகலே மற்றும் பிரகாஷ் பாகலே ஆகியோர் இணைந்து தொழில் செய்து வந்து உள்ளனர். இதில் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தனது தந்தை பிரகாஷ் பாகலேவுக்கு தெரியாமல் விநாயக் பாகலே சில சொத்துகளை விற்றதாக கூறப்படுகிறது.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மேலும் சண்டை வலுத்து உள்ளது. இந்நிலையில் தனது பெற்றோர் பிரகாஷ் பாகலே மற்றும் சித்தி சுனந்தா ஆகியோரை கொல்ல விநாயக் பாகலே திட்டமிட்டு உள்ளார். அதற்காக பைரோஸ் காசி என்ற கூலிப்படை தலைவனை நியமித்த விநாயக் பாகலே இருவரையும் கொன்றால் 65 லட்ச ரூபாய் தருவதாக கூறி 2 லட்ச ரூபாயை அட்வான்ஸ் தொகையாகவும் வழங்கி உள்ளார்.

இதனிடையே கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி பிரகாஷ் பாகலே - சுனந்தா தம்பதியின் மகன் கார்த்திக் திருமண நிச்சயதார்த்தம் நடந்து உள்ளது. பிரகாஷ் பாகலேவின் உறவினர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்று இரவு அங்கேயே தங்கி உள்ளனர். இந்நிலையில் வீட்டு முதல் மாடியில் புகுந்த கூலிப்படையினர் பிரகாஷ் பாகலே - சுனந்தா ஆகியோருக்கு பதிலாக தூங்கிக் கொண்டு இருந்த உறவினர்கள் பரசுராம் ஹதிமானி (வயது 55), அவரது மனைவி லட்சுமி ஹதிமானி (வயது 45), மகள் அகன்ஷா ஹதிமானி (வயது 16) மற்றும் கார்த்திக் பாகலே ஆகியோரை கொடூரமாக கொன்றனர்.

உறவினர்கள் சத்தம் கேட்டு மிரண்டு போன பிரகாஷ் பாகலே - சுனந்தா தம்பதியின் தங்களது அறையினை தாழிட்டுக் கொண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதனிடையே அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் அதில் பதிவாகி இருந்த கடக் நகரைச் சேர்ந்த பைரோஸ் காசி (வயது 29), கடக்கைச் சேர்ந்த ஜிஷான் காசி (வயது 24), மீராஜ் நகரைச் சேர்ந்த சாஹில் காசி (வயது 19), சோஹல் காசி (வயது 19), மீராஜைச் சேர்ந்த சுல்தான் ஷேக் (வயது 23), மகேஷ் சலோன்கே (வயது 21), வாஹித் பெபாரி (வயது 21) ஆகியோரை கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த கொலை சம்பவத்திற்கு விநாயக் பாகலே தான் மூளை என்றும் பெற்றோரை கொல்லச் சென்ற இடத்தில் நிச்சயதார்த்த விழாவில் கலந்து கொள்ள வந்த உறவினர்களை மாற்றி கொன்றதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் விநாயகர் காசி உள்பட 8 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க :"தனது 90 விநாடி உரை காங்கிரஸ், இந்தியா கூட்டணியை நடுநடுங்கச் செய்துள்ளது" - பிரதமர் மோடி! - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details