தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கேரளாவில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து.. 4 பேர் உயிரிழப்பு - அதிகாலையிலேயே சோகம்! - IDUKKI BUS ACCIDENT

இடுக்கியில் கேரள மாநில கேஎஸ்ஆர்டிசி பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்துக்குள்ளான பகுதியில் நடக்கும் மீட்புப்பணி
விபத்துக்குள்ளான பகுதியில் நடக்கும் மீட்புப்பணி (Etv Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2025, 10:18 AM IST

கேரளம்:இடுக்கியில் கேரள மாநில கேஎஸ்ஆர்டிசி பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில், 30க்கும் மேற்பட்ட நபர்கள் காயமடைந்து, நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் இடிக்கி அருகே புல்லுப்பாறை அருகே கேஎஸ்ஆர்டிசி (KSRTC) பேருந்து ஒன்று 34 பயணிகளுடன் சென்று கொண்டிருந்துள்ளது. இந்நிலையில், புல்லுப்பாறை அருகே இன்று (ஜன.6) காலை 6.15 மணியளவில் பேருந்து வளையும் போது, எதிர்பாராத விதமாக 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதனைத் தொடர்ந்து, அப்பகுதியினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த மீட்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் நீண்ட நேரமாகப் போராடி விபத்தில் சிக்கிக் காயமடைந்த நபர்களை மீட்டுள்ளனர். இந்த கோர விபத்தில், மாவேலிக்கரைப் பகுதியைச் சேர்ந்த இரு ஆண்களும், இரண்டு பெண்களும் என நான்கு பேர் உயிரிழந்ததும், கிட்டத்தட்ட 30 பேர் காயமடைந்த நிலையில், அதில் இருவர் மட்டும் பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

விபத்துக்குள்ளான பகுதியில் நடக்கும் மீட்புப்பணி (Etv Bharat)

அதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். தற்போது, உயிரிழந்தவர்களின் உடல்கள் முண்டக்காயம் மருத்துவ அறக்கட்டளை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், காயமடைந்த நபர்கள் முண்டக்காயம் தனியார் மருத்துவமனை மற்றும் காஞ்சிரப்பள்ளி உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க:ஆற்றில் மூழ்கி இறந்ததாக தகனம் செய்யப்பட்ட நபர்.. உயிரோடு வந்ததால் பரபரப்பு!

மேலும், முதற்கட்ட விசாரணையில், அரசு பேருந்தினை வாடகைக்கு எடுத்து, கேரள மாநிலம் மாவேலிக்கரை பகுதியில் இருந்து 30க்கும் மேற்பட்ட நபர்கள் தஞ்சாவூருக்குச் சுற்றுலா சென்றதும், சுற்றுலா முடிந்து பயணிகள் வீடு திரும்பி வந்து கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்தில் சிக்கியதும் தெரிய வந்துள்ளது. தற்போது இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகாலையில் நடந்த இந்த விபத்தானது "எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பிரேக் பிரச்சனையால் நிகழ்ந்ததாகவும், உயிரிழந்த நபர்கள் பேருந்து கவிழ்ந்த போது அடியில் விழுந்ததால் உயிரிழந்ததாகவும்" கூறப்படுகிறாது. தற்போது, சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் நடந்து வருவதாகவும், விபத்தில் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் விபத்து எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details