தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியில் மாணவர்கள் தாக்கியதில் சிறுவன் உயிரிழப்பா? என்ன நடந்தது? - delhi School Boy Died

டெல்லியில் சக மாணவர்கள் தாக்கியதால் பள்ளி மாணவர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவத்தில் குழப்பம் தொடரும் நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னர் தெளிவான முடிவு கிடைக்கும் என டெல்லி போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 24, 2024, 12:22 PM IST

டெல்லி : தலைநகர் டெல்லியில் பள்ளி மாணவர்கள் தாக்கியதில் சக மாணவர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஜனவரி 11ஆம் தேதி இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படும் நிலையில், கடந்த 20ஆம் தேதி மாணவர் இறந்ததாக கூறப்படுகிறது. காயங்களுடன் மீட்கப்பட்ட மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாணவர் உயிரிழப்பிற்கான காரணம் தெரியவராத நிலையில், இருப்பினும் சக மாணவர்கள் தாக்கியதால் அவர் உயிரிழந்ததாக தகவல் கூறப்படுகிறது. சம்பவத்தன்று மாணவர் மூச்சு பேச்சு இல்லாமல் ஒரு சுவற்றின் அருகில் சரிந்து இருந்ததாகவும், சக மாணவர் ஒருவர் அவரை மருத்துவமனையில் அனுமதித்த போது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதாகவும் கூறப்படுகிறது.

மாணவர்களுடனான சண்டை கடந்த ஜனவரி 11 ஆம் தேதி நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், மாணவர் ஜனவரி கடந்த சனிக்கிழமை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இரண்டு சம்பவங்களுக்கும் இடையே பெரிய குழப்பம் நிலவும் நிலையில், மாணவர்கள் தாக்கியதால் சிறுவன் உயிரிழந்தானா அல்லது வேறு ஏதும் காரணமாக என போலீசார் விழிபிதுங்கி வருகின்றனர்.

மாணவரின் உடல் பிரேத பரிசோதனை முடிவு வெளி வந்த பின் வழக்கு விசாரணையில் தெளிவான முடிவு கிடைக்கும் என போலீசார் தெரிவித்து உள்ளனர். இருப்பினும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க :ராமர் கோயிலில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்! கூட்ட நெரிசல்.. தள்ளுமுள்ளு!

ABOUT THE AUTHOR

...view details