தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் காரசார விவாதம்! - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபாட் இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை 100 சதவீதம் ஒப்பிட்டு பார்க்கக் கோரிய வழக்கில் மனித தலையீடுகள் இருப்பின் அது பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 16, 2024, 8:02 PM IST

Updated : Apr 24, 2024, 11:42 AM IST

டெல்லி :மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபாட் இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை 100 சதவீதம் ஒப்பிட்டு பார்க்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

இந்த மனு இன்று (ஏப்.16) நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தட்டா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், வாக்குப்பதிவு இயந்திரங்களின் பதிவாகும் வாக்குகளை தொழில்நுட்பங்களை கொண்டு குறிப்பிட்ட கால அளவில் மாற்றக் கூடியதாக இருப்பதாகவும், மீண்டும் வாக்குச் சீட்டு நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

மேலும், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் மீண்டும் வாக்குச் சீட்டு நடைமுறைக்கு மாறியதாக் தெரிவித்த நிலையில், குறுக்கிட்ட நீதிபதிகள் ஜெர்மனியின் மக்கள தொகை கணக்கு என்ன கேள்வி எழுப்பினர். அதற்கு 6 கோடி தெரிவித்த நிலையில், இந்தியாவில் 97 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், அதில் சராசரியாக 50 முதல் 60 கோடி பேர் வாக்கு செலுத்தும் போது எப்படி வாக்குச்சீட்டு முறையை கடைபிடிக்க முடியும் என்று கேள்வி எழுப்பினர். மேலும் ஐரோப்பிய தேர்தல் சித்தாந்தங்கள் இந்தியாவுக்கு ஒத்துவராது என நீதிபதிகள் கூறினர்.

தொடர்ந்து பேசிய வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், 2017ஆம் ஆண்டுக்கு முன்னர் வரை ஒருவர் வாக்கு செலுத்திய பின்னர் யாருக்கு வாக்கு செலுத்தினோம் என்பதை தெரிந்து கொள்ள வெளிப்படைத்தன்மை கொண்ட கண்ணாடி பொருத்தப்பட்ட விவிபாட் இயந்திரத்தில் காண்பிக்கப்பட்டதாகவும், ஆனால் தற்போது ஒளிபுகாத வகையிலான கண்ணாடி பொருத்தப்பட்டு அதில் 7 விநாடிகள் மட்டுமே காண்பிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், ஒரு தொகுதியில் 200 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றால் அதில் வெறும் 2 சதவீத ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் மட்டுமே சரிபார்க்கப்படுகிறது, அதை 100% சரிபார்க்க உத்தரவிட வேண்டும் என்றார். ஒரு தேர்தலை நடத்த சராசரியா 6 வாரத்திற்கு மேல் தேர்தல் ஆணையம் எடுத்துக் கொள்ளும் போது விவிபாட் இயந்திரத்தில் உள்ள ஒப்புகைச் சீட்டை சரி பார்ப்பதற்கு சில மணி நேரங்கள் கூடுதலாக தேர்தல் ஆணையம் செலவிடுவதால் என்ன என்று தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், வாக்குப்பதிவு இயந்திரத்தில் 100 சதவீத வாக்குகள் பதிவாகிய நிலையில், வாக்குப்பதிவு தினத்தன்று பதிவாகி இருக்கும் வாக்குகள், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் 99 என்று வந்தால் அந்த வாக்குப்பதிவு இயந்திரத்தில் சிக்கல் இருக்கிறது என்பது பொருள்படும். அதனை வேட்பாளர்கள் தெரிந்து கொள்ள முடியும்தானே என்று தெரிவித்தனர்.

ஒரு சட்டசபை தொகுதிக்கு 5 இயந்திரங்கள் மட்டுமே ஆய்வு செய்யப்படுகின்றன. விவிபாட் ஆய்வு சதவீதம் 0.00185 சதவீதம் ஆகும். 1 சதவீதம் கூட இல்லாத நிலையில் குறைந்தபட்சம் 50 சதவீதமாவது ஆய்வுக்கு உட்படுத்தி இருக்க வேண்டும் தெரிவித்தார். வாதங்களை கேட்டறிந்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஏப்ரல் 18ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க :2023ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - ஆதித்யா ஸ்ரீவஸ்தவா முதலிடம்! - 2023 UPSC Civil Service Exam Result

Last Updated : Apr 24, 2024, 11:42 AM IST

ABOUT THE AUTHOR

...view details