சண்டிகர்:நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்.19 ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தல் பரப்புரையில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ள நிலையில் முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு வரும் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
அந்த வகையில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளில் ஒரே கட்டமாக ஜூன் 1-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில், ஃபரித்கோட் மக்களவைத் தொகுதியில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக்கொலை செய்த மெய்க்காவல்களில் ஒருவரான பியாந்த் சிங்கின் மகன் போட்டியிடுகிறார்.
இதுகுறித்து அவர், சரப்ஜீத் சிங் கூறுகையில், "ஃபரித்கோட் மக்கள் விரும்பியதன் பேரில் நான் இந்த தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறேன். இப்பகுதி மக்கள் என் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்டுள்ளனர்" என்றார்.