தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அரியானா முதலமைச்சராக நயப் சைனி தேர்வு! ஆட்சி நீடிக்குமா? காங்கிரசின் திட்டம் என்ன? - Haryana New CM Nayab Saini

Haryana new CM: அரியானாவின் புதிய முதலமைச்சராக குருஷேத்ரா எம்.பி நயப் சைனி தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Mar 12, 2024, 3:20 PM IST

Updated : Apr 3, 2024, 3:27 PM IST

சண்டிகர் : அரியானாவில் மூத்த பாஜக தலைவர் மனோகர் லால் கட்டார் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் புதிய முதலமைச்சராக குருஷேத்ர எம்.பி நயப் சைனி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அரியானாவில் பாஜக - ஜனநாயக ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது.

இந்நிலையில், பாஜகவுக்கும், ஜனநாயக ஜனதா கட்சி தலைவர் துஷ்யந்த் சிங் சவுதாலாவுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனால் அரியானாவில் பாஜக ஆட்சி கலையும் சூழல் நிலவியது. இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும், சண்டிகர் முதலமைச்சருமான மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, சண்டிகரின் புதிய முதலமைச்சராக குருஷேத்ரா எம்.பி நயப் சைனி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இன்று (மார்ச்.12) மாலை பதவியேற்பு நடைபெற உள்ளதாகவும் சண்டிகர் முதலமைச்சராக நயப் சைனி பதவியேற்றுக் கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மொத்த 90 உறுப்பினர்களை கொண்ட சண்டிகர் சட்டப் பேரவையில் பெரும்பான்மைக்கு 46 இடங்கள் தேவைப்படுகின்றன.

இதில் பாஜகவுக்கு 14 எம்.எல்.ஏக்களும், காங்கிரஸ் கட்சிக்கு 30 உறுப்பினர்களும், ஜனநாயக ஜனதா கட்சிக்கு 10 பேர் மற்றும் 7 சுயேட்சைகள் உள்ளனர். இது தவிர இந்திய தேசிய லோக் தள் மற்றும் அரியானா லோகித் கட்சிக்கு தலா 1 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்நிலையில், சுயேட்சைகள் உதவியுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் என பாஜக தெரிவித்து உள்ளது.

அதேநேரம் காங்கிரஸ், ஜனநாயக ஜனதா, இந்திய தேசிய லோக் தள், அரியானா லோகித் ஆகிய கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைந்தால் அது பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. அதன் காரணமாகவே அவசர அவசரமாக பாஜக சுயேட்சைகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி புதிய முதலமைச்சரை அறிவித்து உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.

கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாநிலத்தில் உள்ள 10 மக்களவை தொகுதியையும் பாஜக கைப்பற்றியது. அப்போது ஜனநாயக ஜனதா கட்சி, ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்து 7 தொகுதியில் போட்டியிட போது தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :பாஜக ஆளும் ஹரியானாவில் முதலமைச்சர் திடீர் விலகல்.. மனோகர் லால் மனமாற்றத்தின் பின்னணி என்ன?

Last Updated : Apr 3, 2024, 3:27 PM IST

ABOUT THE AUTHOR

...view details