தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விசாகப்பட்டினத்தில் 16ஆம் தேதி தொடங்கப்பட்ட அணு சக்தி திறன் ஏவுகணை நீர்மூழ்கி கப்பல்

விசாகப்பட்டினத்தில் கடந்த 16ஆம் தேதி அணு சக்தி ஏவுகணையுடன் கூடிய நான்காவது நீர்மூழ்கி கப்பலை இந்தியா தொடங்கியுள்ளது.

ஐஎன்எஸ் அரிஹாத்
ஐஎன்எஸ் அரிஹாத் (Image credits-Etv Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : 5 hours ago

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய கடற்படையின் கப்பல் கட்டுமான மையத்தில் அணு சக்தி திறன் ஏவுகணையுடன் கூடிய நீர்மூழ்கி கப்பல் கடந்த 16ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நீர்மூழ்கி கப்பலுக்கு எஸ்4 என பெயரிடப்பட்டுள்ளது.

புதிதாகத் தொடங்கப்பட்ட அணு சக்தி திறன் கொண்ட ஏவுகணையுடன் கூடிய நீர்மூழ்கி கப்பல் என்பது அணு சக்தி திறனை உயர்த்துவதற்கான ஒரு முன்னெடுப்பாகும். இது 75 சதவிகிதம் உள்நாட்டு பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட அணு உலையுடன் கே-4 எனப்படும் 3500 கிமீ இலக்கை தாக்கக் கூடிய அணு சக்தி ஏவுகனைகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இதற்கு முன்பு இதே வரிசையிலான அணு சக்தி திறன் ஏவுகனையுடன் கூடிய ஐஎன்எஸ் அரிஹந்த் நீர்மூழ்கி கப்பல் 750 கிமீ இலக்கை தாக்கக் கூடிய கே-15 என்ற ஏகவுகனைகளை தாங்கி வந்தது. ஐஎன்எஸ் அரிஹந்த், ஐஎன்எஸ் அரிஹாத் இரண்டும் ஏற்கனவே ஆழ் கடலில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன.

முதலாவது அணுசக்தி திறன் கொண்ட நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் சக்ராவுக்கு எஸ்1 என்று பெயரிடப்பட்டது. ஐஎன்எஸ் அரிஹந்த்துக்கு எஸ்2 என்றும், ஐஎன்எஸ் அரிஹாத்துக்கு எஸ்3 என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இப்போது எஸ்4 என்று குறிப்பிடப்பட்டுள்ள புதிய நான்காவது அணு சக்தி திறன் கொண்ட நீர்மூழ்கி கப்பலுக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. எஸ்4 நீர்மூழ்கி கப்பலானது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் எதிரிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வலுவான பங்கை வகிக்கும்.

ஈடிவி பாரத் தமிழ்நாடு (Image credits-ETV Bharat Tamil Nadu)

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details