சென்னை:மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றும் நிகழ்ச்சி, இன்று (பிப்.26) நடைபெற்றது. இதில் உரையாற்றிய பிரதமர் மோடி, “சில நாட்கள் முன்பாகவே, தேர்தல் ஆணையம் மேலும் ஒரு இயக்கமான, என்னுடைய முதல் வாக்கு – தேசத்தின் பொருட்டு என்பதை தொடக்கியிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
இதன் வாயிலாக, குறிப்பாக முதல்முறை வாக்காளர்கள் பெருவாரியான எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டி கொள்ளப்படுகிறார்கள். உற்சாகமும், ஊக்கமும் நிறைந்த தனது இளைஞர் சக்தியின் மீது எப்போதும் பாரதத்திற்கு பெருமிதம் உண்டு. நமது இளைய நண்பர்கள், தேர்தல் நடைமுறைகளில் எந்த அளவுக்குப் பங்கெடுக்கிறார்களோ, அதன் விளைவு தேசத்திற்கு அந்த அளவுக்கு லாபகரமானதாக இருக்கும்.
நானும்கூட முதல்முறை வாக்காளர்களிடத்திலே வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன், நீங்கள் சாதனை பதிவேற்படுத்தும் எண்ணிக்கையிலே வாக்களியுங்கள். 18 வயது ஆன பிறகு, 18வது மக்களவைக்கான உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறது. அதாவது, இந்த 18வது மக்களவையும்கூட இளைஞர்களின் எதிர்பார்ப்புக்களின் அடையாளமாக விளங்கும். ஆகையால், உங்களுடைய வாக்கின் மகத்துவம் மேலும் அதிகரித்திருக்கிறது.
பொதுத்தேர்தல்களின் இந்த அமளிக்கு இடையே, இளைஞர்களே, நீங்கள் அரசியல் வழிமுறைகளின் அங்கமாக ஆவதோடு கூடவே, இது தொடர்பாக நடைபெறும் வாதம், விவாதங்கள் தொடர்பாகவும் விழிப்போடு இருங்கள். மேலும், நினைவில் வைத்திருங்கள், என்னுடைய முதல் வாக்கு தேசத்தின் பொருட்டு என்பதை.
விளையாட்டுத் துறையாகட்டும், திரைத்துறையினராகட்டும், இலக்கிய உலகைச் சேர்ந்தவர்களாகட்டும், பிற தொழில் வல்லநர்களாகட்டும் அல்லது நமது இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் ஆகட்டும், இந்த இயக்கத்தில் உற்சாகத்தோடு பங்கெடுத்துக் கொள்ளுங்கள், நிபுணர்களே முதன்முறையாக வாக்களிக்கும் நமது வாக்காளர்களை ஊக்கப்படுத்துங்கள் என்று அனைத்துத் துறைகளைச் சார்ந்த தாக்க மேற்படுத்துபவர்களிடத்திலும் நான் கேட்டுக் கொள்கிறேன்.