தானே :மகாராஷ்டிர மாநிலம் தானே அடுத்த கோரேகான் கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுவன், கடந்த ஞாயிற்றுக்கிழமை மர்ம நபரால் கடத்தப்பட்டு உள்ளார். மசூதிக்கு தொழுகைக்காக சென்று விட்டு திரும்பிய போது, சிறுவன் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே சிறுவனை பெற்றோரை தொடர்பு கொண்ட நபர், புதிதாக வீடு கட்ட வேண்டும் அதற்கு 23 லட்ச ரூபாய் பணம் தேவைப்படுவதால் அதை தருமாறு கேட்டு மிரட்டி விட்டு இணைப்பை துண்டித்ததாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இன்று (மார்ச்.25) அதே கிராமத்தை சேர்ந்த ஒருவரது வீட்டில் சிறுவனது சடலம் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு இருந்ததை கண்டுபிடித்ததாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.