தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பார்வையற்றவர்களுக்கு புதிய வெளிச்சம் தரும் ஏஐ திறன் கொண்ட ஸ்மார்ட் கண் கண்ணாடிகள் அறிமுகம்! - KIMS

பார்வையற்ற மாற்றுதிறனாளிகளுக்காக செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ஸ்மார்ட் கண்ணாடிகளை கிருஷ்ணா மருத்துவ அறிவியல் நிறுவனம் உருவாக்கி உள்ளது.

ஏஐ திறன் கொண்ட ஸ்மார்ட் கண் கண்ணாடியை வழங்கும் தெலங்கானா ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா
ஏஐ திறன் கொண்ட ஸ்மார்ட் கண் கண்ணாடியை வழங்கும் தெலங்கானா ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா (Image credits-Etv Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2024, 1:24 PM IST

ஹைதராபாத்:பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக முகத்தை அறிந்து கொள்ளுதல், எழுத்துகளை பேச்சாக மாற்றும் வசதி, திசைகளை அறியும் வசதி ஆகியவற்றைக் கொண்ட செயற்கை நுண்ணறிவு திறன் உடைய ஸ்மார்ட் கண்கண்ணாடிகளை கிருஷ்ணா மருத்துவ அறிவியல் நிறுவனம்(கிம்ஸ்) உருவாக்கி உள்ளது.

மார்வையற்ற மாற்றுத்திறானிகள் சுதந்திரமாக செயல்படவும், அடுத்தவர்களின் துணையின்றி ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு செல்லவும் வழி வகுக்கும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான ஸ்மார்ட் கண்ணாடிகள் எனும் புதிய கண்டுபிடிப்பு வெளி வந்துள்ளது. இதனை கிம்ஸ் அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மையம் கொண்டு வந்துள்ளது. இதனால் பார்வையற்ற மாற்றுதிறனாளிகள் பாரம்பரிய பிரம்புகளை ஊன்றிக் கொண்டு செல்லத் தேவையில்லை. இந்த கண்ணாடிகள் உதவியுடன் மாற்றுத்திறனாளிகள் உலகை அறிந்து கொள்ள புரட்சிகர வழியை வழங்குகிறது.

இந்த புதிய கண்டுபிடிப்பை வியாழக்கிழமை அன்று தெலங்கானா ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் கிம்ஸ் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மருத்துவர் பொல்லினேனி பாஸ்கர ராவ், முன்னாள் டிஆர்டிஓ விஞ்ஞானி புஜங்கா ராவ், எல்வி பிரசாத் கண் மையத்தின் நிறுவனர் மருத்துவர் ஜி.என்.ராவ் ஆகியோர் பங்கேற்றனர்.

பார்வையற்றவர்களுக்கு புதிய வெளிச்சம்: இந்த நிகழ்வில் பேசிய தெலங்கானா ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட ஸ்மார்ட் கண்ணாடிகள், அவர்கள் வாழ்வில் புதிய வெளிச்சத்தை கொண்டு வரும். இந்தியாவில் உள்ள 2 கோடி பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. இந்த புதுமையான கண்ணாடிகளை வடிவமைத்த கிம்ஸ் குழும ஆராய்ச்சியாளர்களுக்கு வாழ்த்துகள். இந்த கண் கண்ணாடிகளை இலவசமாக வழங்குவதும் பாராட்டுக்குரிய முயற்சி என்று கூறினார்.

இதையும் படிங்க:திருமண நிகழ்ச்சியில் ஒரே வரிசையில் தனுஷ், நயன்தாரா - ஆனாலும் பாராமுகம்!

இந்த நிகழ்வில் பேசிய கிம்ஸ் மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் மருத்துவர் பொல்லினேனி பாஸ்கர ராவ், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த கண்ணாடிகள் தன்னம்பிக்கையை அளிக்கும். முதல் கட்டமாக 100 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் இந்த கண்ணாடிகளைப் பெறுவார்கள். இந்த கண்ணாடியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பயிற்சி அளிக்கப்படும்,"என்றார்.

செயற்கை நுண்ணறிவு கண் கண்ணாடியின் சிறப்பம்சங்கள்:400 முகங்களை சேமித்து வைக்க முடியும். குடும்பத்தினர், நண்பர்கள், பெயர் மூலம் அறிமுகமானவர்களை அறிந்து கொள்ள உதவும். மேலும் வீடு, அலுவலகம் அல்லது கல்லூரி ஆகிய இடங்களை முன்கூட்டியே இதில் சேமித்து வைக்க முடியும். மேலும் எதிர்பாராத சிக்கலான தருணங்களில் எச்சரிக்கை செய்யும் வசதியும் உள்ளது. இந்த கண் கண்ணாடிகள் 45 கிராம் எடை மட்டுமே கொண்டவையாகும்.

இதன் விலை ரூ.10,000 ஆகும். ஆரம்ப கட்டத்தில் எந்தவித லாபமும் இன்றி வழங்கப்படுகிறது. 100 கண்கண்ணாடிகள் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. உபயோகிப்பாளர்களின் பின்னூட்டங்களை பொறுத்து மேலும் இதில் அதிநவீன வசதிகள் மேற்கொள்ளப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளது.

ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே கிளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details