தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"ப.சிதம்பரத்தின் கருத்து நாடாளுமன்றத்தை அவமதிப்பதாகும்" - ஜெகதீப் தன்கர்! - P chidhambaram

P Chidambaram: புதிய குற்றவியல் சட்டம் விவகாரத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் கருத்து ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்றும், அவர் கூறிய கருத்துகளை திரும்பப் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

By PTI

Published : Jul 7, 2024, 11:08 PM IST

ப. சிதம்பரம், ஜெகதீப் தன்கர் கோப்புப்படம்
ப. சிதம்பரம், ஜெகதீப் தன்கர் (Credits - ETV Bharat Tamil Nadu)

டெல்லி:மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்க்கும் விதமாக, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் 'X' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு ஒன்று பகிர்ந்துள்ளார். அதில், கடந்த 2020ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் குற்றவியல் சட்டங்களின் சீர்திருத்தங்களுக்கான குழுவை அமைத்தது.

அதில் தலைவர், கன்வீனர் (Convener) மற்றும் உறுப்பினர்கள் இருந்தனர். அதன் அமைப்பு அவ்வப்போது மாற்றப்பட்டது, ஆனால் இறுதியில் குழுவில் ஒரு கன்வீனரும், ஐந்து உறுப்பினர்களும் இருந்தனர். ஒரு உறுப்பினரைத் தவிர மற்ற அனைவரும் பல்வேறு பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களாகப் பணியாற்றினர் மற்றும் குழுவின் பகுதி நேர உறுப்பினர்களாகப் பணியாற்றினர்.

இந்த குழுதான் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களின் வரைவுகளை சமர்ப்பித்தது. இறுதியில், நாடாளுமன்றத்தில் சட்டங்களை நிறைவேற்றியது. அத்தகைய முக்கியமான மசோதாக்களை உருவாக்குவது சட்ட ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும். பகுதி நேரமாகப் பணியாற்றிய மற்றும் பிற பொறுப்புகளைக் கொண்ட ஒரு குழுவிடம் அல்ல" எனக் குறிப்பிட்டு இருந்தார்.

அந்த பதிவில் அவர் பகுதி நேரமாக பணியாற்றுபவர்கள் எனக் கூறியது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளானது. இத குறித்து மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், "முன்னாள் அமைச்சரின் கருத்தை நாளிதழில் படித்து தெரிந்து கொண்டேன்.

நாங்கள் நாடாளுமன்றத்தில் பகுதி நேர ஊழியர்களா? இது நாடாளுமன்றத்தின் மாண்பிற்கு மன்னிக்க முடியாத அவமானம், இதுபோன்ற கருத்தை முன்னெடுத்துச் செல்வதை கண்டிக்கும் அளவுக்கு என்னிடம் வலுவான வார்த்தைகள் இல்லை. அவரது கருத்துகளை அவர் திரும்பப் பெற வேண்டும்" என தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க:இலங்கை அமைச்சர் டெல்லிக்கு அழைப்பு.. மீனவர் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?

ABOUT THE AUTHOR

...view details