மும்பை: நாட்டின் மிகப் பெரிய தொழில் நிறுவனங்களில் ஒன்றான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரும், பிரபல தொழிலதிபருமான ரத்தன் டாடா, உடல் நலம் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து, அவருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியானது.
மறைந்தது இந்தியத் தொழில்துறையின் முகம்..தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்!
இந்தியாவின் மிகப் பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரான டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா (Ratan tata) மும்பையில் உள்ள மருத்துவமனையில் நேற்று (அக்.9) இரவு 11.30 மணியளவில் காலமானார்.
Published : Oct 10, 2024, 6:40 AM IST
|Updated : Oct 10, 2024, 6:46 AM IST
இந்த நிலையில், ரத்தன் டாடா சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 86. தற்போது, ரத்தன் டாடா மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, உடல்நலக்குறைவு காரணமாகக் கடந்த திங்கட்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. ஆனால், அதனை மறுத்த ரத்தன் டாடா தனது சமூக வலைத்தள பக்கத்தில், "எனது உடல்நிலை குறித்து தற்போது பரவி வரும் வதந்திகள் எனது கவனத்திற்கு வந்தது. இந்த தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை, தனது வயது மற்றும் அது தொடர்பான மருத்துவ காரணங்களுக்காக வழக்கமான மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டேன்" எனப் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.