தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புற்றுநோயாளிகளுக்கு ஆறுதல் செய்தி.. இந்தியாவில் புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி 12% லிருந்து 5% ஆக குறைப்பு - gst on cancer drugs reduced - GST ON CANCER DRUGS REDUCED

புதுடெல்லியில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி விகிதம் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.

54வது ஜிஎஸ்டி கவுன்சில்
54வது ஜிஎஸ்டி கவுன்சில் (Credit - ANI)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2024, 4:36 PM IST

புதுடெல்லி: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று (செப்.,9) புதுடெல்லியில் உள்ள சுஷ்மா ஸ்வராஜ் பவனில் 54வது ஜிஎஸ்டி கவுன்சில் நடைபெற்றது. இதில், அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் கலந்துகொண்டனர். அப்போது, ஒட்டுமொத்த ஜிஎஸ்டி கட்டமைப்பை மேம்படுத்த பல முக்கிய நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டன. அத்துடன் சில முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.

அதன்படி, இந்தியாவில் புற்றுநோய் மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, புற்றுநோய் மருந்துகளான டிரஸ்டுஜுமாப் டெரக்ஸ்டெக்கான் (Trastuzumab Deruxtecan), ஒசிமெர்டினிப் (Osimertinib), துர்வாலுமாப் (Durvalumab) ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி விகிதத்தை 12% லிருந்து 5% ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:இந்தியாவில் அபுதாபி பட்டத்து இளவரசர்; இந்தியா - யுஏஇ இடையே கையெழுத்தான முக்கிய ஒப்பந்தங்கள்!

ஆனால், கார் இருக்கைகளுக்கான ஜிஎஸ்டி விகிதம் 18% லிருந்து 28% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நுகர்வோருக்கு B2C (Business-to-Consumer) இ-இன்வாய்சிங் சேவைகளை கொண்டு வர கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், உப்பு சேர்க்கப்பட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்நாக்ஸ்களுக்கு 18 இல் இருந்து 12 சதவீதம் ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது.

ஆயுள் காப்பீடு மற்றும் உடல்நலக் காப்பீடு மீதான ஜிஎஸ்டி தொடர்பான சிக்கல்களை முழுமையாக ஆராய அமைச்சர்கள் குழுவை அமைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில், தமிழ்நாடு, உத்திரப் பிரதேசம், பீகார், மேற்கு வங்கம், கேரளா, ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மேகாலயா, கோவா, தெலுங்கானா, பஞ்சாப் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களை சேர்ந்த அமைச்சர்கள் உறுப்பினர்காளாக இருப்பார்கள். இந்த குழு இந்தாண்டு அக்டோபர் இறுதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறியஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details