ஸ்ரீநகர்: காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்தவர், குலாம் நபி ஆசாத். காஷ்மீரைச் சேர்ந்த இவர், கடந்த 2022ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சி (டிபிஏபி) என்ற பெயரில் கட்சியைத் தொடங்கினார்.
அரசியலுக்கு வருபவர்களை வரவேற்கலாம்: தற்போது நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், ஜம்மு - காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சரான குலாம் நபி ஆசாத் ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியளித்திருந்தார். அதில், 'ஜமாத்-இ-இஸ்லாமி தேர்தலில் பங்கேற்பது வரவேற்கத்தக்கது. இது ஒரு நேர்மறையான முன்னேற்றம் என்றார். மேலும் அவர், “மக்களுக்கும், நாட்டிற்கும் சேவை செய்ய விரும்பி பிரதான அரசியலில் இணையும் அனைவரையும் வரவேற்க வேண்டும்.
2014 மற்றும் 2019 ஆண்டுகளில் ஜம்மு & காஷ்மீரில் உள்ள மூன்று நாடாளுமன்ற தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலைக் காட்டிலும் இந்த தேர்தல் சிறப்பாக இருந்தாலும், வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கவில்லை. வாக்காளர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. இருப்பினும், ஸ்ரீ நகர் நாடாளுமன்றத் தொகுதி உள்ளிட்டவைகளில் எதிர்பார்த்த அளவுக்கு வாக்குப்பதிவு நடைபெறவில்லை என்று குறிப்பிட்டார். ஸ்ரீநகர் வாக்காளர்கள் அதிருப்தியில் இருப்பதாக சில அரசியல் தலைவர்கள் கூறுகின்றனர்.
ரஷித்திற்கு ஆதரவு:அது உண்மையாக இருந்தால், அதிக அளவிலான அதாவது 80 முதல் 90 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்க வேண்டும். அப்போது தான் மக்களின் கோபம் வெளிப்பட்டுள்ளது என்று புரிந்து கொள்ள முடியும்” என்றார். மேலும், ஜம்மு காஷ்மீரில் உள்ள ஐந்து தொகுதிகளில் 3 தொகுகளில் மட்டும் போட்டியிட முடிவு செய்யப்பட்டது.