உடுப்பி: கர்நாடக மாநிலம் உடுப்பியில் கடந்த மே 18ஆம் தேதி இரவில், இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது, இரு தரப்பு காரும் தாறுமாறாக ஓடி ஒன்றையொன்று மோத வைத்து சண்டை போட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல், அதில் ஒரு தரப்பு வாள் போன்ற கூர்மையான ஆயுதங்களையும் பயன்படுத்தி உள்ளனர்.
உடுப்பியில் நடுரோட்டில் இருதரப்பு மோதல்.. வைரலாகும் வீடியோ! - Gang war in Udupi viral video
Udupi Gang fight: கர்நாடக மாநிலம் உடுப்பியில் நடுரோட்டில் இருதரப்பு மோதிக் கொண்ட சம்பவம் தொடர்பான வீடியோ வைரலானதை தொடர்ந்து, இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Published : May 25, 2024, 10:43 PM IST
இந்த நிலையில், இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. இதனையடுத்து, இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த உடுப்பி நகர காவல் துறையினர், ஆஷிக் மற்றும் ரகிப் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து இரண்டு ஸ்விஃப்ட் கார், இரண்டு பைக்குகள், ஒரு வாள் மற்றும் ஒரு கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், மீதம் உள்ள நபர்களை தீவிரமாகத் தேடி வருவதாகவும் உடுப்பி காவல் கண்காணிப்பாளர் கே அருண் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:பெட்ரோல் போட்டுக் கொண்டிருந்த பெண்ணை நோக்கி வந்த கார்.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்! - Car Hit Woman At Petrol Station