டெல்லி: முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக டெல்லியில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், நட்வர் சிங் நேற்று (ஆக.10) சனிக்கிழமையில் சிகிச்சைப் பலனின்றி காலமானார். அவருக்கு வயது 95.
முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங்கின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது பதிவில், "ஸ்ரீ நட்வர் சிங்கின் மறைவு வேதனை அளிக்கிறது. அவர் தூதரக நல்லுறவு மற்றும் வெளியுறவுக் கொள்கை மூலம் நாட்டிற்கு சிறப்பான பங்களிப்புகளை செய்தார். அவர் தனது அறிவாற்றல் மற்றும் செழிப்பான எழுத்துக்காகவும் அறியப்பட்டார். அவரை இழந்து துயரத்தில் இருக்கும் அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி" என்று பிரதமர் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியின்போது, 2004-2005 காலகட்டத்தில், நட்வர் சிங் வெளியுறவுத் துறை அமைச்சராக பணிபுரிந்தார். பாகிஸ்தானுக்கான தூதராகப் பணியாற்றிய நட்வர் சிங், 1966 முதல் 1971 வரையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சியிலும் பணிபுரிந்துள்ளார்.
நட்வர் சிங் கடந்த கால பயணம்:
முன்னாள் காங்கிரஸ் எம்பி நட்வர் சிங், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 2004- 2005 காலகட்டத்தில் இந்தியாவின் வெளியுறவு அமைச்சராக இருந்தார். அவர் பாகிஸ்தானுக்கான தூதராகவும் பணியாற்றி உள்ளார். மேலும் கடந்த 1966 முதல் 1971 வரை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் அரசிலும் பணியாற்றி உள்ளார்.
நடவர் சிங், ''The Legacy of Nehru: A Memorial Tribute' மற்றும் 'My China Diary 1956-88' உள்ளிட்ட பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். அவரது சுயசரிதை 'One Life is Not Enough' என்ற புத்தகமாக வெள்யிடப்பட்டுள்ளது. தொடர்ந்து 1986ஆம் ஆண்டு வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
1989ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குப் பிறகும் வெளியுறவுத் துறை அமைச்சராகத் அவர் தொடர்ந்தார். 1991ஆம் ஆண்டு பி.வி.நரசிம்மராவ் பிரதமரான பிறகு, நட்வர் சிங், என்.டி.திவாரி மற்றும் அர்ஜுன் சிங் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அகில இந்திய இந்திரா காங்கிரஸ் என்ற புதிய கட்சியை உருவாக்கினார்.
கடந்த 1998ஆம் ஆண்டு நட்வர் சிங் மற்ற இரண்டு தலைவர்களுடன் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தொடர்ந்து 1998ஆம் ஆண்டு பரத்பூரில் இருந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன்பின் 2002ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் 2004 ஆம் ஆண்டு மத்திய வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:அதானியுடன் செபி தலைவருக்கு தொடர்பா? ஹிண்டன்பெர்க் அறிக்கையால் புது சர்ச்சை! என்ன நடந்தது? - Hindenburg on Sebi Adani Relation