ஶ்ரீநகர்:பத்துஆண்டுகள் கழித்து ஜம்மு-காஷ்மீருக்கு நடந்த தேர்தலில் தேசியமாநாடு கட்சிக்கு அபார வெற்றி கிடைத்திருக்கிறது. அதன் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார். புட்காம், கந்தர்பால் ஆகிய இரண்டு தொகுதிகளில் ஓமர் அப்துல்லா வெற்றி பெற்றுள்ளார்.
முஸ்லீம்கள் மக்கள் தொகை அதிகம் உள்ள காஷ்மீர் பள்ளத்தாக்கு மாவட்டங்கள் மற்றும் பீர்பாஞ்சல் மாவட்டத்தில் உள்ள ரஜோவ்ரி, பூஞ்ச் ஆகியவற்றில் தேசிய மாநாடு கட்சி-காங்கிரஸ் கூட்டணி 48 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஈடிவி பாரத்துக்கு எக்ஸ்க்ளூசிவ் ஆக ஓமர் அப்துல்லா அளித்த பேட்டியில், புதிய அரசு திங்கள் கிழமை பதவி ஏற்கும் என்றும் ஜம்மு மாவட்டத்தில் இருந்து பாஜகவின் 29 எம்எல்ஏக்கள் வெற்றி பெற்ற நிலையில் அந்த பகுதிக்கு பிரதிநித்துவம் அளிப்பது குறித்தும் பேசினார்.
ஈடிவி பாரத்: 2009ஆம் ஆண்டு நீங்கள் முதலமைச்சராக இருந்ததற்கும், இப்போது 2024ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது?
ஒமர் அப்துல்லா : இது ஒரு முழுமையான அரசல்ல. ஆனால், இதற்கு அதிகாரம் இல்லை என்பதல்ல. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான அதிகாரப்பட்டியல் பெரியதாக இருந்தது. ஆனால் மிகவும் முக்கியமாக இது ஒரு தற்காலிக அடிப்படையிலானது. மதிப்பிற்குரிய பிரதமர் (நரேந்திர மோடி) மற்றும் இதர மத்திய அரசின் மூத்த தலைவர்கள் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து தரப்படும் என்று கூறியிருக்கின்றனர். எனவே மிகவிரைவில் அது நடக்கும் என்று நாம் நம்புவோம்.
ஈடிவி பாரத்: மத்திய அரசுடன் மோதல் போக்கான உறவுதான் நீடிக்குமா?
ஒமர் அப்துல்லா: மோதல் போக்கான அரசாகவே இருக்கும் என்று நாம் எல்லோரும் என் கருதுகின்றோம் என்று தெரியவில்லை. அப்படி மோதல் போக்காக இருக்காது பொறுத்திருந்து பாருங்கள். ஜம்மு-காஷ்மீ் மோதல் போக்குடன் கூடிய அரசாக இருக்காது என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றேன். அதே போன்றதொரு போக்கை டெல்லியில் இருந்தும் எதிர்பார்க்கின்றேன். மோதலோடு இருப்பதை நாங்கள் எதிர்நோக்கவில்லை. மோதல் போக்கானது ஜம்மு-காஷ்மீர் மக்களின் நலனுக்கானது என்று நான் நம்பவில்லை. மோதல் போக்குடன் நடந்து கொள்வதற்கு அவர்கள் வாக்களிக்கவில்லை. பிரச்னைகள் தீர வேண்டும் என்பதற்காக மக்கள் வாக்களித்திருக்கின்றனர். மோதல் போக்கான சூழலில் அவர்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணமுடியாது.
ஈடிவி பாரத்: ஜம்மு மாவட்டங்களுக்கு பிரதிநித்துவம் அளிக்கப்படுமா?
ஒமர் அப்துல்லா: அவர்கள் இந்த அரசின் ஒரு பகுதி அல்ல என்று எப்படி உங்களால் சொல்ல முடியும்? இந்த அரசுக்கு ஆதரவாக ஓட்டுப்போட்டவர்களுக்கு மட்டும் இந்த அரசு சொந்தமானதல்ல. இந்த எல்லோருக்குமானது. பிரதமர் மோடிக்கு 140 கோடி மக்களும் ஓட்டுப்போடவில்லை. ஆனால், அவர்தான் இந்தியாவின் பிரதமர். ஆகவே, 1.4 கோடி மக்கள் ஜம்மு-காஷ்மீரில் இந்த கூட்டணிக்கு வாக்களிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், இந்த அரசு ஜம்மு-காஷ்மீர் மக்களின் ஒவ்வொருக்குமான அரசாகும். இந்த கருத்தில், இந்த அரசு ஶ்ரீநகரில் 70 % வாக்களிக்காதவர்களுக்காக இருக்காது என்பதல்ல. ஏனெனில் ஶ்ரீநகரில் 30 % பேர் மட்டுமே வாக்களித்தனர். அந்த 70 % பேர் அரசின் குரலாக இருப்பார்கள்.