டெல்லி: வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 16, 2024 அன்று நடைபெற உள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியான நிலையில், அதற்கு டெல்லி தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, டெல்லி தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ள X வலைத்தளப் பதிவில், “16.04.2024 அன்று நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியாகி வருகிறது.
2024 ஏப்ரலில் நாடாளுமன்றத் தேர்தலா? - டெல்லி தேர்தல் ஆணையம் விளக்கம்! - டெல்லி தேர்தல் ஆணையம்
Lok Sabha Elections 2024: ஏப்ரல் 16, 2024 என்பது தேர்தல் பணிகளை திட்டமிட்டு முடிப்பதற்கான உத்தேச தேதி மட்டுமே என டெல்லி தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Etv Bharat
Published : Jan 23, 2024, 2:06 PM IST
ஏப்ரல் 16, 2024 என்பது தேர்தல் பணிகளை, அதற்குரிய அதிகாரிகள் திட்டமிட்டு முடிப்பதற்கான உத்தேச தேதி மட்டுமே என்பதை தெளிவுபடுத்துகிறோம்” என தெரிவித்துள்ளது. மேலும், இதனை இந்திய தேர்தல் ஆணையம் தனது X வலைத்தளப் பக்கத்தில் மறுபதிவு செய்துள்ளது.
இதையும் படிங்க:பாபரில் இருந்து மோடி வரை.. அயோத்தி ராமர் கோயில் கடந்து வந்த பாதை..