டெல்லி :நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், 7வது மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்நிலையில், மக்களவை தேர்தலுக்கான 44 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டு உள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் போட்டியிடும் 15 வேட்பாளர்களின் பெயர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டு உள்ளது. சிட்டிங் எம்பி ஏ.எம் ஆரிப் ஆழப்புழா தொகுதியில் போட்டியிட உள்ளார்.
அதேபோல் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே சைலேஜா, மாநிலங்களவை உறுப்பினர் இ.கரீம் ஆகியோருக்கும் இந்த முறை போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல் மேற்கு வங்கத்தில் போட்டியிடும் 17 வேட்பாளர்களின் பெயர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டு உள்ளது.