ஹைதராபாத்:இரண்டு மாதத்திற்கு முன்பாக, தலைநகர் டெல்லியில், 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 50 கிலோ எடையுள்ள போதைப்பொருட்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய ரசாயனp பொருளான சூடோபெட்ரைன் பிடிபட்டது. இதனைத் தொடர்ந்து, நாடு முழுவதும் போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் தடுக்கும் பணியில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், போதைpபொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்யும் நபர்களையும் கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில், தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் கஞ்சா மில்க்ஷேக், கஞ்சா சாக்லேட் உள்ளிட்ட போதை வஸ்துக்கள் பிடிபட்டுள்ளன. மேலும், நகரில் பல்வேறு பகுதிகளில் கஞ்சா பவுடர், கஞ்சா எண்ணெய், கஞ்சா சாக்லேட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜகத்கிரிகுட்டா காவல்நிலையத்திற்கு உட்பட்ட மளிகைக் கடையில் சைபாராபாத் போலீசார் நடத்திய சோதனையில், கஞ்சா பொடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கஞ்சா பவுடரை பாலில் மில்க்ஷேக்காக உட்கொள்வதாக கடை உரிமையாளர் கூறியுள்ளார். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், நகரின் நில பகுதிகளில் ஐஸ்கிரிமில் கஞ்சா எண்ணெய் கலந்து விற்கப்படுகிறது.