டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று (ஜன.31) நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது. இதில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு முன்னிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.
இது தொடர்பாக, நாடாளுமன்ற கூட்டத்தொடரின் தொடக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, 'ராம் ராம்' எனக் கூறியபடி தனது பேச்சைத் தொடங்கினார். அப்போது பேசிய அவர், 'குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வழிகாட்டுதலின் படி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வார் எனவும், இந்த பட்ஜெட் மகளிருக்கான சக்தியாக இருக்குமெனவும், இந்த சந்தர்ப்பத்தை எந்த உறுப்பினர்களும் தவறவிடாதீர்கள் எனவும் தெரிவித்தார்.