டெல்லி:இன்று அதிகாலை 5.35 மணிக்கு டெல்லி - வாரணாசி இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து வாரணாசி செல்லும் இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், இண்டிகோ விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அவசரகால வழி மூலம் வெளியேற்றப்பட்டனர்.
டெல்லி விமான நிலையத்தில் டெல்லி-வாரணாசி இண்டிகோ விமானம் இன்று அதிகாலை 5.35 மணிக்கு புறப்பட தயாராக இருந்த நிலையில், விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து விமானத்தில் இருந்த பயணிகள் அவசரகால வழியாக அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதனால், விமான நிலையத்தில் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என போலீசார் தரப்பில் தகவல் தெரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து டெல்லி ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் போலீஸ் துணை கமிஷனர் உஷா ரங்னானி கூறுகையில், 'வாரணாசிக்கு புறப்பட இருந்த இண்டிகோ விமானத்தின் கழிவறையில் "வெடிகுண்டு @5.30" என்று எழுதப்பட்ட காகிதம் குறித்து அதிகாலை 5 மணியளவில் தகவல் கிடைத்தது. இதையடுத்து முழு பாதுகாப்பு அம்சங்களுடன் மேற்கொண்ட ஆய்வில் சந்தேகத்திற்கிடமான எந்தவொரு பொருட்களும் கிடைக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.