பெங்களூரு : கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து விமானம் வந்து உள்ளது. அந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டு உள்ளனர். அப்போது எளிதில் சந்தேகிக்கும் வகையில் வித்தியாசமான இருந்த ஒரு பயணியின் பையை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டு உள்ளனர்.
பையை சோதனையிட்ட அதிகாரிகளுக்கு அதில் திடீர் அதிர்ச்சி காத்திருந்தது. மஞ்சள் நிறத்திலான 10 அனகோண்டா பாம்புகளை அந்த பயணி கடத்தி வந்தது தெரியவந்தது. பாம்பை கடத்திய பயணியை உடனடியாக சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்து தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.