தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து: சதி வேலை காரணமா என என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை - BAGMATI EXPRESS TRAIN ACCIDENT

திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்கு உள்ளானதில் சதிவேலை காரணமாக இருக்கலாமா என்பது குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தேசிய புலனாய்வு அதிகாரிகள் ஆய்வு
தேசிய புலனாய்வு அதிகாரிகள் ஆய்வு (image credits-Etv Bharat)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 12, 2024, 1:11 PM IST

திருவள்ளூர்: பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்கு சதிவேலை காரணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம், மைசூரில் இருந்து சென்னை பெரம்பூர் வழியாக பீகார் மாநிலம் தர்பாங்கா நோக்கி சென்று கொண்டிருந்த பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் (12578) இன்றிரவு 8.30 மணி அளவில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் நின்றிருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த நிலையில் இந்த விபத்து குறித்து ரயில்வே துறை தனியாக விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பொன்னேரி பகுதியில் ரயில் தண்டவாளங்களின் ஓரங்களில் இருந்த கம்பிகள் கழற்றப்பட்டு கிடந்தன. மேலும், சிக்னல் பலகைகளில் உள்ள கொக்கிகள் கழற்றப்பட்டிருந்தன.

பாக்மதி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தும் தேசிய புலனாய்வுப் பிரிவு அலுவலர்கள். (Etv Bharat Tamil Nadu)

ஆனால், அவை உரிய நேரத்தில் ரயில்வே ஊழியர்களால் கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்பட்டன. அப்போதே இது சதி வேலையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் இப்போது கவரைப்பேட்டை அருகே பாக்மதி ரயில் விபத்துக்கு உள்ளான நிலையில் அதில் சதி வேலை இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து இன்று காலை கவரைப்பேட்டை அருகே விபத்து நடந்த பகுதியில் தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்

ABOUT THE AUTHOR

...view details