மும்பை:தனியார் நிறுவனத்தின் இழுவைப் படகு மகாராஷ்டிர மாநிலத்தின் அலிகாப் கடற்கரையை ஒட்டிய அரேபிய கடற்பகுதியில் சென்று கொண்டு இருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக கடலில் கவிழந்து விபத்துக்குள்ளானது. இழுவைப் படகு கவிழ்ந்தது குறித்து தகவல் அறித்து மும்பை கடற்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
கடும் மழை, சுறாவளிக் காற்று மற்றும் போதிய வெளிச்சமின்மை உள்ளிட்ட காரணங்களால் மீட்பு பணியில் கடும் தொய்வு ஏற்பட்டது. கடற்படையின் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் முதற்கட்டமாக 8 பேர் மீட்டக்கப்பட்டனர். தொடர்ந்து நடந்த மீட்பு பணியில் மொத்தம் 14 பேர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 8 பேர் அலிபாக் கடற்கரை சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இழுவைக் கப்பலில் தொழிலநுட்ப கோளாறு ஏற்பட்டு என்ஜின் பழுதானதாகவும் அதன் காரணமாக நடுக்கடலில் கப்பலில் நின்ற நிலையில், மோசமான வானிலையால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகவும் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மீட்கப்பட்ட 14 பேரும் அலிபாக் கடற்கரைக்கு கடற்படையின் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக கொண்டு வரப்பட்டனர். ஜெய்கர் மற்றும் சாலவ் இடையே சென்று கொண்டு இருந்த போது இழுவை கப்பல் பேரிடரில் சிக்கி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இழுவைப் படகு அலிபாக் கடற்கரையில் கொலாபா கோட்டைக்கு அருகில் உள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:மும்பைக்கு ரெட் அலர்ட்! வரலாறு காணாத மழையில் தத்தளிக்கும் மக்கள்! தேர்வுகள் ரத்து! - Mumbai Heavy Rain