வாரணாசி: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி மாவட்டத்தில் 12 வயது சிறுமியை, ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதும், மேலும் அதனை சிறுவன் ஒருவன் வீடியோவாக பதிவு செய்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயின் செல்போனுக்கே அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் அடிப்படையில், சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் அதே பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்தது.
மேலும், சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை வீடியோவாக பதிவு செய்த சிறுவன் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த வழக்கை விசாரிக்கும் போலீசார் கூறுகையில், "சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது, அவரது தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டோம்.
அதன் அடிப்படையில், சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபரை கைது செய்துள்ளோம். மேலும், இதனை வீடியோவாக பதிவு செய்த சிறுவனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவரது தாயாருக்கு தனது மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வீடியோ வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரிக்கும் போது, இச்சம்பவம் கடந்த ஜூலை 12ஆம் தேதி நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று சிறுமி தனது கால்நடைகளை அருகில் உள்ள வயலுக்கு மேய்க்கச் சென்றுள்ளார். அப்போது, குற்றம் சாட்டப்பட்ட நபர், சிறுமிக்கு பொம்மைகள், சாக்லேட்டுகள் போன்றவற்றை கொடுத்து, சிறுமியை ஏமாற்றி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்" என தெரிவித்துள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு (ETV Bharat Tamil Nadu) ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க:'நான் போன பின்னும்'.. நிலச்சரிவில் தாயை இழந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் பெண்.. கேரளாவின் கண்ணீர் கதை!