வெள்ளத்தில் சிக்கிய இளைஞர்..! பத்திரமாக மீட்பு - இமாச்சல் பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிய இளைஞர்
🎬 Watch Now: Feature Video
இமாச்சல பிரதேசம்: ஷாபூரின் சம்பி காட் பகுதியில் மணல் மற்றும் ஜல்லி எடுக்கச் சென்ற இளைஞர் மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டார். டிராக்டர் மேற்கூரை வரை வெள்ள நீர் வந்ததால் அந்த இளைஞர் டிராக்டரின் மேல் ஏறி நின்று, உதவி கேட்டு கூச்சலிட்டார். பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு கயிறு மூலம் அந்த இளைஞரை அந்த வழியாக சென்றவர்கள் பத்திரமாக காப்பாற்றினர். அந்த காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.