நுரை பொங்கி பாழாகும் பாலாறு..மாசுகட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை தேவை.. - பாலாற்றில் மீண்டும் நுரை
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர்: வாணியம்பாடியில் நேற்று (ஆக.24) இரவு பெய்த மழையின் நடுவே தோல் தொழிற்சாலை நிர்வாகம் தோல் கழிவுகளை பாலாற்றில் கலந்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் மாராப்பட்டு பகுதியில் உள்ள பாலாறு பாலத்தின் கீழ் தோல் கழிவுகளால் பாலாறு வெள்ளம்போல் நுரை பொங்கி ஓடுவதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மாசுகட்டுப்பாட்டு வாரியம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.