மஞ்சுவிரட்டுப்போட்டி: மாடுகள் முட்டியதில் 15-ற்கும் மேற்பட்டவர்கள் காயம்! - sivagangai

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 23, 2022, 6:54 PM IST

சிவகங்கை: காரைக்குடி தெற்கு தெரு நாட்டார்களின் சார்பில் 74ஆம் ஆண்டுக்கான மஞ்சுவிரட்டுப்போட்டியில் 300க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. அதில், சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களிலிருந்து சுமார் 300 மாடுகள் போட்டியில் பங்கேற்க கொண்டுவரப்பட்ட நிலையில், காளைகளை அடக்க 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் களமிறங்கினர். களத்தில் அவிழ்த்து விடப்பட்ட மாடுகள் சீறிப்பாய்ந்து சென்றன. இப்போட்டியின்போது காளைகள் முட்டியதில் 15-ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விறுவிறுப்பாக நடைபெற்ற மஞ்சு விரட்டுப்போட்டியை சிவகங்கை, தேவகோட்டை, திருப்புத்தூர், சிங்கம்புணரி, காரைக்குடி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் கண்டுரசித்தனர்.

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.