கன்னியாகுமரியில் விடுதலைப்போராட்ட வீரர்களின் வேடமணிந்து பிரமாண்ட ஊர்வலம் - களியாக்காவிளை இருந்து கேரளாவிற்கு தேசிய கொடியுடன் ஊர்வலம்
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-16109992-thumbnail-3x2-knk.jpg)
கன்னியாகுமரி மாவட்டத்தில் இரு மாநிலங்களுக்கு இடையே ஒற்றுமையைப் பறைசாற்றும் வகையில் தமிழ்நாடு கேரள எல்லைப்பகுதியான களியாக்காவிளையில் இருந்து கேரளாவிற்கு ஆகஸ்ட் 15அன்று நடந்த பிரமாண்ட சுதந்திர தினப்பேரணியில் 75 அடி நீளம் கொண்ட கதர் தேசியக்கொடி கொண்டு செல்லப்பட்டது. குறிப்பாக, இதில் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த சுதந்திரப்போராட்ட வீரர்களின் வேடமணிந்து, அனைத்து மாநில கலாசார உடையணிந்து இருமாநிலங்களைச்சேர்ந்த 10,000க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என்று பெரும்பாலானோர் பங்கேற்றனர்.