Video: புகார் அளிக்க வந்த பெண்ணிடம் அராஜகமாக நடந்துகொண்ட பாஜக எம்எல்ஏ - பெங்களூரு
🎬 Watch Now: Feature Video
கர்நாடகத் தலைநகர் பெங்களூருவின் மழை வெள்ளப்பாதிப்பை பாஜக எம்எல்ஏ அர்விந்த லிம்பவல்லி பார்வையிட வந்தார். அப்போது, அவரிடம் புகார் மனு அளிக்க வந்த பெண்ணிடம் அவர் அராஜகமாக சத்தம் போட்டு பேசியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதை அங்குள்ளவர்கள் வீடியோ எடுத்த நிலையில், அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. மேலும், அப்பெண்ணிடம் வாக்குவாதம் ஏற்பட்டபோது, பாஜக எம்எல்ஏ கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். மேலும், அந்த பெண்ணை காவல் நிலையம் அழைத்துச்செல்லும்படி காவல் துறையிடம் அவர் தெரிவிப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது. தொடர்ந்து, அந்தப் பெண்ணை போலீசார் காவல் நிலையம் அழைத்துச்சென்றனர்.