கொடைக்கானல் அருவிகளில் நீர் வரத்து அதிகரிப்பு - water rise in kodaikanal waterfalls
🎬 Watch Now: Feature Video
வழிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துவருகிறது. இந்த சூழ்நிலையில் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் அவ்வப்போது கனமழை பெய்து வந்தது. நேற்று (மே.31) பெய்த கனமழையால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இருப்பினும், வட்டக்கானல் அருவி, பாம்பார் அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகள் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரை ரசிக்க ஆளின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.