தொடர் மழை: நிரம்பிய பிளவக்கல் அணை! - தொடர் மழையால் நிரம்பிய பிளவக்கல் அணை
🎬 Watch Now: Feature Video
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியார் பிளவக்கல் அணையின் நீர்மட்டம், தொடர் மழையின் காரணமாக கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால், 47 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 40 அடிக்கும் மேல் உயர்ந்துள்ளது. அணைக்கு தற்போது வினாடிக்கு 1500 கன அடிக்கும் மேல் நீர்வரத்து இருப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏற்கனவே நீர் வெளியேறிக் கொண்டிருப்பதால் தரைப்பாலம் மூழ்கிய நிலையில் தற்போது 3000 கன அடி நீர் வெளியேறுவதால் ஆபத்து நேராமல் இருக்க அப்பகுதியில் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.