மார்கழி மாதப்பிறப்பு: தங்க பட்டுடையில் காட்சியளித்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்! - ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் சுவாமி
🎬 Watch Now: Feature Video
108 திவ்யதேசங்களில் ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த திருத்தலம் ஸ்ரீவில்லிபுத்தூர். இங்கு அவதரித்த ஸ்ரீ ஆண்டாள், மார்கழி மாதம் 30 நாட்களும் பாவை நோன்பிருந்து திருப்பாவை பாடி, கண்ணனுக்கு பாமாலை சூடி பரந்தாமன் கண்ணனையே மணந்தாள். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் சிறப்பாக உற்சவம் நடைபெறும். மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு இன்று (டிச. 16) அதிகாலை மூன்று மணிக்கு ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, ஆண்டாளுக்கு திருப்பாவை பாடல்களுடன் சிறப்பாக நெய்யப்பட்ட தங்க பட்டுப்புடவை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.