ராமநாதபுரத்தில் பரவலாக மழை - விவசாயிகள் மகிழ்ச்சி - ராமநாதபுரத்தில் மழை
🎬 Watch Now: Feature Video
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த வாரம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை காரணமாக மாவட்டம் முழுவதும் நேற்று (ஜூன்4) பரவலாக மழை பெய்தது. அதுபோல இன்றும் (ஜூன்5) ராமேஸ்வரம், பரமக்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.