அதிகரித்த நீர்வரத்து - அனுமதியளிக்க மக்கள் கோரிக்கை - coimbatore
🎬 Watch Now: Feature Video
கோவை: தொண்டாமுத்தூர் அடுத்த சாடிவயல் பகுதியில் குற்றால அருவியில் கடந்த இரு மாதங்களாக நிலவிய கடுமையான வறட்சியின் காரணமாக அருவியை காலவரையின்றி மூடுவதாக வனத்துறையினர் அறிவித்தனர். தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் குற்றால அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. எனினும் இதுவரை சுற்றுலாப் பயணிகளுக்கு அருவிக்கு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை நீர்வரத்து உள்ளதால் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.