விவசாய நிலத்தில் புகுந்த மலைப்பாம்பு - ஆம்பூர் செய்திகள்
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த கதவாளம் பாரதி நகரில் ஜெயராமன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் அறுவடை பணி நடைபெற்று வருகிறது. வழக்கம்போல் பணியாளர்கள் அறுவடை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுமார் 12 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஊர்ந்து செல்வதைப் பார்த்து அச்சத்தில் உறைந்த பணியாளர்கள் அங்கிருந்து பயந்து ஓடியுள்ளனர். தகவலறிந்த ஆம்பூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மலைப்பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.