சசிகலாவை வரவேற்று அமமுகவினர் வைத்த பேனர்கள் அகற்றம் - சசிகலாவை வரவேற்று அமமுகவினர் வைத்த பேனர்
🎬 Watch Now: Feature Video
காஞ்சிபுரம் அருகே சசிகலாவை வரவேற்று அமமுகவினர் கொடிகளையும், வரவேற்பு பேனர்களையும் வைத்துள்ளனர். இதனிடையே அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் உயர் அலுவலர்களின் உத்தரவின்பேரில் சாலை ஓரங்களில் கட்டப்பட்டிருந்த கொடிகளையும் வரவேற்பு பேனர்களையும் அகற்றிவருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு நிலவியது. சசிகலாவை வரவேற்க ஏராளமான அமமுகவினர் குவிந்துள்ளதையடுத்து காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.