காந்தி ஜெயந்தி - பிட் இந்தியா சுதந்திர ஓட்டம் 2.0 தொடக்கம் - திண்டுக்கல் மாவட்ட செய்திகள்
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்லில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு பிட் இந்தியா சுதந்திர ஓட்டம் 2.0-ஐ மாவட்ட ஆட்சியர் விசாகன் தொடங்கி வைத்தார்.மாநகராட்சியில் தொடங்கி அரசு கல்லூரி மருத்துவமனை, நேருஜி நகர், ஆர்எம் காலனி, தாடிக்கொம்பு ரோடு வழியாக 4.7 கிலோமீட்டர் பயணித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவுற்றது. நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சுப்ரமணியன், காந்தி கிராமிய பல்கலைக்கழகம் துணைவேந்தர் பொறுப்பு ரங்கநாதன், பல்கலைக்கழக பதிவாளர் சிவகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.