மணிமுக்தா அணையிலிருந்து 11,624 கன அடி உபரி நீர் வெளியேற்றம் - மணிமுக்தா அணையிலிருந்து உபரி நீர்
🎬 Watch Now: Feature Video
கள்ளக்குறிச்சி: சூளாங்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள மணிமுக்தா அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக அணைக்குத் தொடர்ந்து விநாடிக்கு சுமார் 11 ஆயிரத்து 624 கன அடி உபரி நீர் வந்துகொண்டிருக்கிறது. இதன் காரணமாக ராயபுரம், பாலப்பட்டு, அணைக்கரைக் கோட்டாலம், வீரசோழபுரம், மடம், வடபூண்டி, சூளாங்குறிச்சி உள்ளிட்ட மணிமுக்தா ஆற்றின் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள இடர் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.