'விடாம... ஓடணும்' - அரியலூர் இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டிய விளையாட்டுப் போட்டிகள் - Ariyalur district news
🎬 Watch Now: Feature Video
அரியலூர்: அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் விழுப்புரம் மண்டல அளவிலான தொழிற்பயிற்சி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்கியது. ஓட்டப்பந்தயம், பேட்மிண்டன், கபடி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் வரும் 22ஆம் தேதி வரை நடைபெறவுள்ளன. இதனை மாவட்ட ஆட்சியர் ரத்னா கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
இதில், கடலூர், பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களைச் சேர்ந்த 14 அணிகள் போட்டிகளில் கலந்துகொண்டுள்ளன. போட்டியில் வெற்றி பெறும் வீரர்கள் அடுத்து கோயம்புத்தூரில் நடைபெறவுள்ள உள்ள மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பார்கள். இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளை அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர், அலுவலர்கள் செய்து வருகின்றனர்.