நடிகர் சரத் பாபு உடலுக்கு ஒய்.ஜி மகேந்திரன், இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா அஞ்சலி
🎬 Watch Now: Feature Video
சென்னை: உடல்நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் சரத் பாபு சிகிச்சைப் பலனின்றி நேற்று (மே 22) காலமானார். 200-க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்டப் படங்களில் நடித்த இவர், தமிழில் ரஜினியுடன் நடித்த அண்ணாமலை, முத்து உள்ளிட்டப் படங்கள் மூலம் நல்ல வரவேற்பைப் பெற்றார்.
பல நீங்காத கதாப்பாத்திரங்கள் மூலம் தமிழ் சினிமாவில் இன்னும் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும் சரத் பாபுவின் இறப்பு, திரைத்துறைக்கு மாபெரும் இழப்பு என திரைத்துறையினர் தங்கள் துக்கத்தை தெரிவித்து வருகின்றனர். சரத் பாபுவின் இறுதிச்சடங்கு இன்று (மே 23) சென்னையில் நடைபெற்றது.
இதில் பல்வேறு திரைத்துறையினரும் கலந்துகொண்டு, இறுதி அஞ்சலி செலுத்தினர். அந்த வகையில், ஒய்.ஜி.மகேந்திரன் சரத் பாபுவிற்கு அஞ்சலி செலுத்தி பின் கூறுகையில், ''தன்னை வாடா போடா என அழைத்து பேசும் நண்பர் இன்று இல்லை. நல்ல மனிதர், திரைத்துறையில் எவராலும் வெறுக்க முடியாத ஒரு நபர். அவரை இன்று இழந்துவிட்டேன்’ எனத் தெரிவித்தார்.
மேலும் அதனைத்தொடர்ந்து, இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா கூறுகையில், “அண்ணாமலை திரைப்படத்தில் ரஜினி அவர்களின் நடிப்பு எப்படி இருக்குமோ அதே அளவிற்கு அசோக் கதாபாத்திரத்துக்கும் இருந்திருக்கும். அனைவரும் எங்களை சகோதரர்கள் போல் இருப்பதாகக் கூறுவர். அது உண்மை தான். நான் இன்று எனது சகோதரனை இழந்துவிட்டேன்” என்றார்.
இதையும் படிங்க: நடிகர் சரத்பாபு மரணம்: பிரதமர், ஆளுநர், ரஜினி, கமல் உள்ளிட்டப் பலர் இரங்கல்!