எங்கள் நரேந்திரரே தனித்து வா.. தாமரையை மலரச் செய்வோம்.. நெல்லையில் பாஜக போஸ்டர்.. - nellai bjp poster
🎬 Watch Now: Feature Video
திருநெல்வேலி மாநகரில் வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் பாஜக சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டர்களில், எங்கள் நரேந்திரரே தனித்து வா, தாமரையை தமிழகத்தில் 40-ம் மலரச் செய்வோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக-பாஜக கூட்டணியில் அதிருப்தி நிலவி வரும் நிலையில், தனித்து வா என்று குறிப்பிடப்பட்டிருப்பது, கூட்டணியில்லாமல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிட தயாராகி வருவதை குறிக்கும் விதமாக உள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக - பாஜக கூட்டணி குறித்து பேசிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. அந்த வகையில், அவர் தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் உடன் இணைந்து எந்தத் தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைக்க பாஜக முடிவெடுத்தால் நான் கட்சிப் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த கருத்தை வரவேற்பதாக அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போதில் இருந்து வெளிப்படையாக அதிமுக - பாஜக இடையே அதிருப்தி கருத்துகள் துளிர்விடத் தொடங்கிவிட்டன. திருநெல்வேலி தொகுதியில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.