விநாயகர் சதுர்த்தி எதிரொலி.. சிலை தயாரிப்பு பணி மும்முரம்.. வாழ்வாதாரத்தை எதிர்நோக்கும் தொழிலாளிகள்! - Tiruvannamalai Ganesha statue work
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் விநாயகர் சிலைகள் செய்திடும் பணி தீவிரமடைந்துள்ளது.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி வருகிற செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது வழக்கம். இதனால் செங்கம் ஒன்றிய பகுதியில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றன.
மேலும், கொரோனா ஒழிந்து கட்டுப்பாடுகள் தளர்ந்து கொண்டாடப்படும் பண்டிகை என்பதால், இந்த ஆண்டு விநாயகர் சிலைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஐந்து அடி முதல் 15 அடி வரையில் மயில் விநாயகர், சிங்கமுக விநாயகர், மும்பை விநாயகர் என பல்வேறு வகையான விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
அதனைத் தொடர்ந்து, தயாரிக்கப்படும் சிலைகள் அரசு விதிகளுக்கு உட்பட்டு, ரசாயனக் கலவைகள் கலக்காமல் காகிதக் கூழ் கொண்டு, தண்ணீரில் எளிய முறையில் கரையும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இப்பகுதியில் தயாரிக்கப்படும் சிலைகள் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் சிலை தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், கொரோனா காலத்தில் முற்றிலும் அழிந்த தொழில்களில் ஒன்றான விநாயகர் சிலை தயாரிப்பு, இந்தாண்டு புத்துயிர் பெற்றுள்ளதாகவும், இதனால் இந்த ஆண்டு விநாயகர் சிலை விற்பனை அதிக அளவு இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் சிலை தயாரிப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.