கடவுளாக மாறிய கருணைக்கிழங்கு.. மக்கள் பூஜை செய்து வழிபாடு.. பெரம்பலூரில் நடந்தது என்ன?
🎬 Watch Now: Feature Video
பெரம்பலூர்: வேப்பந்தட்டை வட்டம், அரசலூரை சேர்ந்தவர் ராதா கிருஷ்ணன் என்னும் விவசாயி. இவர் தனது வயலில் சாகுபடி செய்த கருணைக்கிழங்கை அறுவடை செய்து வீட்டில் வைத்துள்ளார். அவ்வாறு அறுவடை செய்யப்பட்டு வீட்டில் வைத்திருந்த ஒரு கருணைக்கிழங்கு மட்டும் முளைத்து நாகப்பாம்பு படம் எடுத்து நிற்பது போல் இருந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, விவசாயி ராதா கிருஷ்ணன் வீட்டில் கருணைக்கிழங்கில் நாகப்பாம்பு உருவம் வந்த தகவல் கிராம மக்களிடையே பரவியது. இதனால் ராதாகிருஷ்ணன் வீட்டிற்குப் பொதுமக்கள் கண்காட்சிக்குச் செல்வது போல் படையெடுக்கத் தொடங்கினர். இதனால் அந்த கருணைக்கிழங்கை அங்குள்ள மாரியம்மன் கோயிலில் ராதாகிருஷ்ணன் வைத்துள்ளார்.
பின்னர், கோயிலில் வைக்கப்பட்ட அந்த கருணைக்கிழங்குக்கு அரசலூர் கிராம மக்கள் மஞ்சள் குங்குமம் பூசி, மலர் மாலை சூட்டி,
பால் அபிஷேகம் செய்து வழி பட்டு வருகின்றனர். கருணைக்கிழங்கில் நாகப்பாம்பு உருவம் இருந்ததை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வணங்கிச் செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோருக்கு சுவாமிமலையில் கூட்டு பிரார்த்தனை