"அடுத்த நொடி நிச்சயம் இல்லாத வாழ்க்கை" - மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த காட்டு யானைகளின் கடைசி நிமிடங்கள்! - மாரண்டஹள்ளியில் யானை மின்சாரத்தில் சிக்கி பலி
🎬 Watch Now: Feature Video
தருமபுரி: பாலக்கோடு அடுத்த மாரண்டஹள்ளி காளிக்கவுண்டன் கொட்டாய் கிராமத்தில் விவசாய வயலில் வைத்த மின்வேலியில் சிக்கி மூன்று காட்டு யானைகள் பரிதாபமாக உயிரிழந்தது. கடந்த ஒரு மாதமாக இரண்டு பெண் யானை, ஒரு ஆண் யானை மற்றும் இரண்டு குட்டி யானை என ஐந்து யானைகள் பாலக்கோடு மாரண்டஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் சுற்றி வந்தது. இந்த யானைகள் கடந்த மாதம் ஜெர்தலாவ் பெரிய ஏரியில் தஞ்சமடைந்து ஏரி தண்ணீரில் குளித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.
மேலும் ஐந்து யானைகளும் ஒன்றாகக் கூட்டமாக பல்வேறு இடங்களில் சென்று தேவையான உணவுகளை எடுத்துக்கொண்டு வயல் பகுதியிலேயே முகாமிட்டிருந்தது. இந்நிலையில் திங்கட்கிழமை இரவு மின்சாரம் தாக்கி இரண்டு பெண் யானை ஒரு ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது.
இதில் உயிர் தப்பிய இரண்டு குட்டி யானைகள் உயிரிழந்த யானைகளைச் சுற்றிச் சுற்றி வந்து உயிரிழந்த யானையை எழுப்பத் தனது தும்பிக்கையால் முயற்சி செய்யும் வீடியோ தற்போது மனதைக் கரைய வைக்கும் வகையில் உள்ளது. ஒன்றாகச் சுத்தி வந்த யானைகளில் மூன்று யானைகள் உயிரிழந்த சம்பவம் பாசத்தில் மனிதர்களைப் போல யானையும் கண்ணீர் விடும் என்பதனை உணர்த்தியுள்ளது.