டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து சிகரெட் பாக்கெட் திருட்டு.. வெளியான சிசிடிவி - courtallam
🎬 Watch Now: Feature Video
தென்காசி மாவட்டம் மெயின் அருவியில் இருந்து பழைய குற்றாலம் சாலை செல்லும் ஆயிரப்பேரி விளக்கு அருகே அரசு மதுபான கடை இயங்கி வருகிறது. இந்த மதுபான கடை அருகிலேயே வசந்தகுமார் என்பவர் தனியார் பார் ஒன்று நடத்தி வருகிறார். குற்றாலம் செல்லும் சாலையில் இந்த மதுபான கடை செயல்படுவதால் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் மதுப்பிரியர்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில், நேற்றைய முன்தினம் (மே 30) இரவு மதுபான கடைக்கு அருகில் உள்ள பார் பூட்டை உடைத்து திருட்டு நடைபெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து பாரின் உரிமையாளர் காலையில் வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைத்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும், அந்த திருட்டில் பாரில் உள்ள 10 ஆயிரம் மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் 58 ஆயிரம் பணம் திருடப்பட்டதுடன், சிசிடிவி கேமராக்களும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளன.
பின்னர் இந்த சம்பவம் குறித்து குற்றாலம் காவல் துறையினர் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது குற்றாலம் சாலையில் பரபரப்பாக இயங்கக்கூடிய பாரில் திருட்டு நடைபெற்ற சம்பவம் குறித்து குற்றாலம் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.